மத்திய மின்துறை அமைச்சருடனான மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்பு!

Jul 03, 2020 04:03 PM 323

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான மாநாட்டில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி காணொலி மூலம் பங்கேற்றார்.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் எரிசக்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், தமிழகம் சார்பில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் இருந்து காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது, மின்சாரத் துறை கூடுதல் செயலர் எஸ்.கே. பிரபாகர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அஸ்வின் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comment

Successfully posted