தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Feb 11, 2019 12:12 PM 90

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 14-ந் தேதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெயிலின் தன்மை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையாகவும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted