2 இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

Feb 18, 2021 03:36 PM 803

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூடுதலாக இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைத்துறையின் இணைச் செயலாளராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ், பொதுத் தேர்தல் துறையின் இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் ஐஏஎஸ், பொதுத் தேர்தல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின், இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Comment

Successfully posted