ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு தயாராக உள்ளதா?

Dec 04, 2021 01:31 PM 1831

ஒமிக்ரான் அச்சுறுத்தல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு தயாராக உள்ளதா?... பரிசோதனை செய்ய உபகரணங்கள் இல்லாத நிலையில், என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பரவலின் போது, அதனை கண்டறிய RT-PCR பரிசோதனை கருவிகள் மற்றும் அதற்கான ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களையும் தேவைக்கேற்ப நியமித்து அன்றைய அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால் கொரோனா பரவலை திறமையாக எதிர்கொண்ட அதிமுக அரசு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தியது.

மேலும், அம்மா மினி கிளினிக், நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் கிராமப் புறங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்தி, நோய் பரவலை கட்டுப்படுத்தியது.

இந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த திணறும் திமுக அரசு, தற்போது, ஒமிக்ரான் பரவலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை செய்ய ஆய்வக கருவிகள் மற்றும் ஜீனோம் சிக்கொஸ்ஸிங் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள், தமிழகத்தில் போதுமான அளவில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், ஒமிக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில எல்லைப் பகுதிகளில் இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாமல், கர்நாடக வாகனங்கள் தமிழக எல்லைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கு காரணமாக அச்சமடைந்துள்ள பொதுமக்கள், ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு தயாராக உள்ளதா?... பரிசோதனை செய்ய உபகரணங்கள் இல்லாத நிலையில், என்ன செய்யப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comment

Successfully posted