இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை - ஆணையர் பிரகாஷ்!

Jul 16, 2020 06:07 PM 947

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முதல்நிலை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பரிசோதனையை, சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். அதிக பரிசோதனை செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் நலமாக இருந்தால் தான், களப்பணி சிறப்பாக இருக்கும் என்பதால், பரிசோதனை தொடங்கப்பட்டு ள்ளதாகத் தெரிவித்தார்.

Comment

Successfully posted