சட்டக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது -அமைச்சர் சி.வி.சண்முகம்

Nov 02, 2018 01:30 PM 959

சட்டக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். அப்போது பேசிய அமைச்சர், சட்டப்பல்கலைக் கழக வளாகத்தில், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்று வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, போக்குவரத்து செலவு 75 ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சட்டக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர், சட்ட ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

Comment

Successfully posted