ஸ்டெம்பை பதம் பார்த்த தமிழ்நாட்டு புயல்!

Dec 02, 2020 03:09 PM 864

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் தனது 3வது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.


சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கினார். அவரது முதல் பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் எதிர்கொண்டார். 129 புள்ளி 5 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தை பின்ச் எதிர்கொள்ள முடியாமல் தடுப்பாட்டம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் அவரது 3வது ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலிய வீரர் லபுஷேனை போல்ட் ஆக்கி அசத்தினார். அவர் வீசிய அந்த பந்து 135 புள்ளி 1 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்டெம்பை பதம் பார்த்தது.

Comment

Successfully posted