திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரிப்பு

Oct 03, 2021 03:40 PM 2649

திமுகவினர் போல் கட்டபஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, அராஜகம் போன்றவற்றில் அதிமுகவினர் ஈடுபடாததால், பொதுமக்களிடம் நன்மதிப்பு உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு அவர் வருகை புரிந்தார்.

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் ஒருங்கிணைப்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களை திமுக அரசு கண்டும் காணாமல் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted