தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளும் திமுக

Oct 03, 2021 03:49 PM 1964

நாமக்கல்லில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிக்க முயன்ற திமுகவினரை அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்ள் மற்றும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஊராட்சி 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இங்கு தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறி திமுகவினர் பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அமைப்புசாரா சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வாரியத்தின் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கூறி அப்பகுதி முழுவதும் உறுப்பினர்களை சேர்த்து வருவதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்த அதிமுக தொண்டர்கள், விண்ணப்ப படிவங்களுடன் இருந்த திமுகவினரிடையே நியாயம் கேட்டனர்.

அதற்கு திமுகவினர் அலட்சியமாக பதிலளித்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுகவினரின் கேல்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுகவினர் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.

Comment

Successfully posted