அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

Jul 24, 2021 07:56 PM 2323

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளை சிக்கி 136 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 120க்கும் மேற்பட்டோரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

அசாம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர்கள் கதிர்வேலின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நியூஸ் ஜெ செய்திகள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்

Comment

Successfully posted