கேரளா தரும் 2 எம்.எல்.டி தண்ணீரை தேவைப்பட்டால் தமிழகம் ஏற்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

Jun 22, 2019 03:44 PM 195

கேரளா தருவதாக கூறியிருக்கும் 2 எம்.எல்.டி தண்ணீரை, தேவைப்படும் போது தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை தாங்கி பிடிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று திமுகவின் கே.என்.நேரு கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 1967க்கு பிறகு காங்கிரஸ் யார் முதுகிலாவது சவாரி செய்து தான் தேர்தலை சந்தித்து வருகிறது என்றார்.

Comment

Successfully posted