விளையாட்டுத் துறையில் தமிழகம் முதல் இடம் பிடிக்கும் -அமைச்சர் செங்கோட்டையைன்

Oct 30, 2018 10:20 AM 443

விளையாட்டுத் துறையில் தமிழகம் முதல் இடம் பிடிக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மணவிகளுக்கான மாநில அளவிலான 36-வது பாரதியார் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டுத்துறையில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 7-வது இடத்தை பிடித்துள்ளதாக கூறினார். விரைவில் முதல் இடம் பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்தியாவே வியக்கத்தக்க வகையில் பல்வேறு மாற்றங்களை தமிழகம் செய்து வருவதாக கூறிய அவர், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனே பட்டய கணக்கர் பயிற்சி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


Comment

Successfully posted

Super User

CONGRATULATIONS