இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது -எம்.பி மனோ கணேசன்

Nov 07, 2018 01:49 PM 559

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது என அக்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்த நிலையில், மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததால் அரசியல் சர்ச்சை வெடித்தது. ஆனால் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே பெரும்பான்மையை நிரூபிக்க, இலங்கை நாடாளுமன்றம் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராஜபக்சே ஆதரவு திரட்டி வரும் நிலையில், அவருக்கு ஆதரவளிக்க மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தரும்படி ராஜபக்சே கேட்டுக்கொண்டதாகவும், தங்களது கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.களும் ராஜபக்சேவின் கோரிக்கையை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted