தனியார் பள்ளியில் தமிழர்களின் பண்பாட்டை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள்

Jan 13, 2019 03:55 PM 138

சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பாட்டம் புலியாட்டம் போன்ற தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 35 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில், கரகாட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம் , கோலாட்டம் , குச்சிப்புடி ஆட்டம் போன்ற தமிழ் பண்பாடுள்ள பாடல்களுக்கு நடனமாடினர். பெரும்பாலும் விழாக்கள் என்றாலே சினிமா பாடல்களுகு நடனமாடுவதை வழக்கமாக கொண்டு வரும் நிலையில், தமிழ் கலாச்சாரம் உள்ள பாடல்கள் மட்டுமே நடனமாடிய மாணவ, மாணவிகளை இவ்விழாவை காண வந்த பொதுமக்கள் ரசித்து பாராட்டி சென்றனர்.

Comment

Successfully posted