முதல்வருடன் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு!

Jul 30, 2020 09:58 PM 1048

படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை பசுமை வழிச்சாலை, முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்க கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார்.

Comment

Successfully posted