தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021!

Apr 06, 2021 06:35 AM 395

6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் கொண்ட தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

கன்னியாகுமரியில், சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைக்கான இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டி போட உள்ளனர்.

மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 50% வாக்குச் சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

300 கம்பெனி துணைராணுவத்தினர் உள்ளிட்ட 1,58,263 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Comment

Successfully posted