திருமாவளவனுக்கு அணி மீதுதான் கவலையே தவிர அணையை பற்றியது அல்ல - தமிழிசை

Dec 04, 2018 09:03 PM 292

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு தி.மு.க. அணியைப் பற்றித்தான் கவலையே தவிர, மேகதாது அணையைப் பற்றி அல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு, கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருச்சியில், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அரசியல் ஆதாயத்துக்காக மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறினார். தி.மு.க. தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயன்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

திருமாவளவனின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். திருமாவளவனின் கவலை அணையைப் பற்றியது அல்ல என்றும், அணியைப் பற்றிய கவலையே அவரிடம் உள்ளதாகவும் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted