தமிழகம், புதுவையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவக்கம்

Mar 14, 2019 08:05 AM 42

தமிழகம், புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 29ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்களும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூவாயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தேர்வினை 152 கைதிகள் எழுதுவதற்கு வசதியாக புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய சிறைச்சாலைகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Comment

Successfully posted