உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்

Dec 07, 2019 06:32 AM 705

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலை எப்பாடு பட்டாவது நடத்துவதுதான் அரசின் கொள்கை என்றும், ஆனால் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக திமுக பாடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted