மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

Feb 26, 2020 12:16 PM 102

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 20ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 9ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

Comment

Successfully posted