ஆன்லைன் காதல் பழசு..! ஆன்லைன் திருமணம் இது புதுசு..!

Jan 19, 2022 08:23 PM 2881

இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் திருமணம் நடைபெறப் போகிறது.அதுவும் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது.

மாப்பிள்ளை தினேஷ் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மணமகள் ஜனக நந்தினி டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.இவர்கள் தங்களின் திருமணம் மற்றும் அதன் வரவேற்பு நிகழ்ச்சியை மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கி வருகின்றனர்.

மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் மூலம் நமக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்து நமக்கு பிடித்தவர்களின் உருவங்களை உருவாக்கி உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சுற்றிப்பார்க்கலாம். மெட்ராஸ் ஐஐடியில் திட்ட உதவியாளராக இருக்கும் தினேஷ் எதிரியம் மைனிங் தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டு வருகிறார்.

image

அதனால் இந்த மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹாரி பார்ட்டர் தீம் மூலம் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களைத் தழுவி அவர்களின் டிஜிட்டல் உருவங்களை உருவாக்கப் போவதாகக் கூறியுள்ளார். ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry இடத்தில் இருந்து திருமண நடக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகிலேயே, முதன்முதலாக மெய்நிகர் திருமண விழா நடந்தது. புளோரிடாவைச் சேர்ந்த‌ ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் இருவரும் மெய்நிகர் திருமணம் செய்த முதல் ஜோடிகள் ஆவார்கள்.

இதற்காக இவர்களில் அவதார்கள் அதாவது இவர்களைப் போலவே உள்ள உருவங்கள் மற்றும் இவர்களுக்குப் பிடித்த உடையணிந்து, பிடித்த இடம் எல்லாமே மெட்டவர்சில் வடிவமைக்கப்பட்டு, இந்தத் திருமணத்தை அமெரிக்காவின் விர்பெலா நிறுவனம்  நடத்தியது.

மணப்பெண் ஜனக நந்தினியின் தந்தை சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கிறார். அவருடைய உருவத்தையும் இந்த மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி தனது வருங்கால மனைவிக்கு பரிசளிக்கப் போவதாகவும்,மேலும் அந்த மணமகளின் தந்தை தான் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் இந்த திருமணத்தில் தலைமை வகிக்க போவதாகவும் கூறியுள்ளார். தினேஷ் அவர்களின் இந்த முடிவிற்கு ஜனக நந்தினி சம்மதித்துள்ளார்.


ஆனால் இவர்கள் விர்ச்சுவல் திருமணத்திற்கு செல்லும் ஒரே ஜோடி அல்ல. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சந்தீபன் சர்க்கார் மற்றும் அதிதி தாஸ் தம்பதியினர், ஜனவரி 24 அன்று தங்கள் திருமணத்துக்கு 100 முதல் 120 பேரை மட்டுமே நேரில் அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

image

மேலும் 300 பேர், 'கூகுள் மீட்' செயலி வாயிலாக திருமணத்தை ஆன்லைனில் காண ஏற்பாடு செய்துஉள்ளார். இதில் பங்கேற்கும் விருந்தினர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஸொமாட்டோ(ZOMATO) உணவு வினியோக சேவை அளிக்கும் செயலி வாயிலாக வீட்டுக்கே கல்யாண சாப்பாடு டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிட் 19 காலத்தில் அனைவராலும் வரமுடியாது என்பதாலும், ஒரு புதுவிதமான அனுபவத்தை வழங்கவும் இந்த மெட்டாவெர்ஸ் ஹாரி பார்ட்டர் தீம்-ஐ உருவாக்கி அதில் தினேஷ் மற்றும் நந்தினி அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கதாபாத்திரத்தை ஹாரி பார்ட்டரில் உள்ள கதாபாத்திரத்தை தழுவி உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு வெப்சைட் லிங்க் மற்றும் ஐடி பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். அதை லாகின் செய்து திருமண நிகழ்வை மெட்டாவெஸில் காணலாம். மெட்டாவெர்சிலேயே மணமக்களுக்கு பரிசுகளும் கொடுக்கலாம். இதுவே இந்த தொழில்நுட்ப திருமணத்தின் சிறப்பம்சமாகும்.

இந்தத் திருமணத்தை சென்னையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் மெட்டாவெர்சில் நடத்துகிறது. 'இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் திருமணம்' என்று திருமணத்துக்கான அழைப்பிதழ் மற்றும் மாதிரி முன்னோட்ட வீடியோவை டிவிட்டரில் மணமகன் தினேஷ் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை நாம் கீழே காணலாம்...

https://twitter.com/i/status/1480739883681415169

 

Comment

Successfully posted