அக்டோபருக்கான ரேஷன் பொருட்கள்; நாளை முதல் 3 நாள்கள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Sep 27, 2020 07:33 AM 292

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு பொருட்கள் தரப்படுகின்றன.

அதன்படி அக்டோபர் மாத ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வரும் 28, 29,30ஆம் தேதிகளில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்றும், ரேசன் பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று டோக்கன்களை விநியோகம் செய்வார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொருட்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted