நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

Jun 19, 2021 02:59 PM 802

டாஸ்மாக் கடையை திறந்துவிட்ட பிறகு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கணவர் குடித்தே தீர்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

image

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்த பிறகே, கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தொகுப்பு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதனால், பல இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவியிடம் அடித்து வாங்கியும், சில இடங்களில் கணவர்களே வாங்கிக் கொண்டு டாஸ்மாக் சென்று குடிக்கும் அவலம் நிலவுகிறது. இந்நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் தையல்காரான சம்மரபுரி, கொரோனா நிவாரணமாக அரசு கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மதுவுக்கே செலவு செய்து தீர்த்துள்ளார். கணவன் நிவாரண பணத்தை வாங்கிக் கொண்டு மளிகை பொருட்கள் வாங்கி வருவார் என மாலை வரை காத்திருந்த மனைவி தீபாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. பின்னர், மதுபோதையில் வந்த கணவரிடம் மனைவி தீபா 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த மனைவி தீபா, வீட்டிற்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்த தாம்பரம் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் சம்மரபுரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.image

Comment

Successfully posted