மின்சார வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு!

May 04, 2021 09:30 PM 491

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அரசாணையின்படி மின்சார வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த நிலையில் மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ல் இருந்து 60 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் மே 31 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted