சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும்!- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Apr 02, 2021 10:05 PM 1084

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், கோர பசியில் திமுகவினர் இருப்பதாக தெரிவித்தார். தில்லுமுல்லு செய்து கொல்லைப் புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க தி.மு.க.வினர் துடித்துக்கொண்டு இருப்பதாகவும் விமர்சனம் செய்தார். மக்கள் விழிப்புடன் இருந்து, திமுகவை விரட்டியடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில், அப்பாவி ஏழை மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தவர், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா என முதலமைச்சர் தெரிவித்தார்.

Comment

Successfully posted