அமெரிக்க வாழ் தமிழர்கள் முதலமைச்சருக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பு

Sep 07, 2019 03:10 PM 206

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு வாழும் தமிழர்கள் பூங்கொத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற முதல்வர், பின்னர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ நகரங்களில் அமெரிக்கத் தொழில்முனைவோர், அமெரிக்க வாழ் தமிழ் தொழில்முனைவோரை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார். அப்போது 5 ஆயிரத்து 80 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இதையடுத்து சான்பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். இதனிடையே அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் இன்று துபாயக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Comment

Successfully posted