வாள் சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற பள்ளி மாணவன்

Jan 20, 2020 10:54 AM 252

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன், டெல்லியில் நடந்த தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே ஓன்பைத்வேலி பகுதியைச் சேர்ந்த பரகத் அழி - பைரா பானு தம்பதியின் மகன் ராஜா பீர்முகமது. இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு வருடமாக சரவணன் என்பவரிடம், வாள் சண்டை பயிற்சி பெற்று வருகிறார். இவர் கடைசியாக மாநில அளவில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் முதலிடம் பெற்றார்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய மாணவன் ராஜா பீர்முகமதுவுக்கு, அப்பகுதியினர் மாலை அணிவித்தும், ஊக்கத்தொகை வழங்கியும் பாராட்டினர்.

Related items

Comment

Successfully posted