ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8ஆம் தேதி தொடக்கம்

May 15, 2019 07:43 PM 420

ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிப்பு வெளியிட்டது. அதன்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய D.T.Ed. முடித்தவர்கள் முதல் தாள் தேர்விலும், பட்டப்படிப்புடன் சேர்த்து B.Ed. முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்தநிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 9 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதற்கான விவரங்கள் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted