தொலைக்காட்சி நிருபர் மைக்-ஐ கடித்த பாம்பு

Feb 11, 2020 06:14 PM 274

ஆஸ்திரேலியாவில் தொகுப்பாளர் பணியில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி நிருபரின் மைக்கை கடித்த பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நைன் நியூஸ் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஆகும். இந்த  நிறுவனம் சமீபத்தில் பாம்பு பாதுகாப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. அதற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கியது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிருபரின் தோள்களில் விஷம் இல்லாத சிறிய வகை மலைப்பாம்பை வைத்து அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அப்போது அந்த பெண் நிருபரின் மைக்கை பாம்பு கடித்தது. சுமார் மூன்று முறை அந்த பாம்பு மைக்கை கடித்தது.

Comment

Successfully posted