சப்தரிஷீஸ்வரர் கோயிலில் திருவீதி உலா

Mar 16, 2019 10:21 AM 103

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் திருவீதி உலா நடைபெற்றது.

லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்கால் நடும் விழா கடந்த 8ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் காலை பல்லாக்கு புறப்பாடும், இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது.10ம் தேனி விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று காலை சந்திரசேகரர் சுவாமி மற்றும் அம்மனின் பல்லாக்கு புறப்பாடு நடைபெற்றது. இரவு பூச மண்டபத்தில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேரோடும் வீதி, உள்வீதிகளில் சப்தரிஷீஸ்வரர்உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted