நெல்லையப்பர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத்திருவிழா

Feb 11, 2020 12:21 PM 140

நெல்லையப்பர் கோயிலில் நடந்து வந்த தைப்பூச திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில், கடந்த ஜனவரி 30ம் தேதி அன்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

12 நாட்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, தெப்ப மண்டபத்தில் எழுந்தருளிய நெல்லையப்பர், அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர், அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திற்குள் எழுந்தருளினார். பின்னர், வேத, வாத்தியங்கள் முழங்க, தேவாரப் பாடல்களோடு, தெப்பத்தில் வலம் வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 

Comment

Successfully posted