தேரை தோழில் சுமந்து செல்லும் வித்தியாசமான திருவிழா

Apr 24, 2019 11:50 AM 415

ஓசூர் அருகே தேரை தோழில் சுமந்து செல்லும் வித்தியாசமான திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பலேரிப்பள்ளி என்னும் கிராமத்தில் வீரப்பந்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய சித்திரை திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல்நாளில் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வீரபத்திர சுவாமி அமர்த்தப்பட்ட மரத்திலான தேரினை பலேரிப்பள்ளி, எடுவணப்பள்ளி, மராட்டிபாளையம் ஆகிய மூன்று கிராம மக்கள் வித்தியாசமான முறையில் தேரினை தோழில் சுமந்து கிராமங்களை சுற்றி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Comment

Successfully posted