செங்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Feb 24, 2020 08:30 AM 490

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாசிமாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் பூங்கரகம், தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தியதுடன், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலைய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

Comment

Successfully posted