பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை

Feb 11, 2020 06:46 PM 176

கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைகானல் அருகேயுள்ளது பேரிஜம் ஏரி. வனத்துறை கட்டுபாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்த பேரிஜம் பகுதியிலுள்ள சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலையை சரி செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

Comment

Successfully posted