குஜ்ஜார் சமூகத்தினரின் தொடர் போராட்டத்தால் பதற்றம்

Feb 11, 2019 12:07 PM 165

ராஜஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த, மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 8ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் செல்லும் தண்டவாளத்தின் மீது கூடாரங்களை அமைத்து இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசாருக்கும், போராட்ட காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்.

Comment

Successfully posted