அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதலால் பதற்றம்

Feb 16, 2020 11:27 AM 231

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக், கூட்டு ராணுவப்படை தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இதன் பின்னணியில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹஷீத் - அல் - ஷாபி அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அமெரிக்காவை குறிவைத்து அரங்கேறிய 19வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted