மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!!

Jul 11, 2020 10:52 AM 366

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள போரிவளி என்ற இடத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. மளமளவென பரவிய தீயால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது

Comment

Successfully posted