ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Dec 16, 2020 11:13 AM 1335

ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் இருக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள போந்தூர் பகுதியில் கார் இருக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ மளமளவென பற்றி எரிந்ததால் அந்த பகுதியை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted