தீவிரவாதத்தை தனது கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

Dec 07, 2019 03:14 PM 411

தீவிரவாதத்தை தனது கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது, ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் சாகசங்களை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை தனது கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். அண்டை நாட்டினரான அவர்கள், நான்கு போர்களில் சண்டையிட்டு அனைத்தையுமே இழந்திருந்தாலும், அவர்களுடைய பாதை பொருத்தமானதாக இல்லை என்றும் கூறினார். எனவே அவர்களை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தயார் செய்து கொள்ள வேண்டும் என ராணுவ வீரர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted