பாதுகாவலரை திருமணம் செய்து மகாராணி பட்டத்தை வழங்கிய தாய்லாந்து மன்னர்

May 02, 2019 04:07 PM 257

தாய்லாந்து மன்னர் வஜிரலோர்ங்கோன் தனது பாதுகாப்பாளரான பெண்ணை திருமணம் செய்து அவருக்கு மகாராணி பட்டத்தை வழங்கியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு முன்னாள் விமானப்படை அதிகாரியான சுதிடா டிட்ஜாயை தனது மெய்பாதுகாவலர் பிரிவின் துணை தளபதியாக மன்னர் நியமித்திருந்தார். இந்தநிலையில் சுதிடா, மன்னருடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவை கொண்டிருந்தவர் என்பதுடன் மன்னருடன் பொதுமக்கள் முன்னிலையில் பல தடவை தோன்றியிருந்தார். எனினும் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக அரண்மனை அறிவிக்காத நிலை இருந்தது.

இந்தநிலையில், மன்னர் வஜிரலோர்ங்கோன், சுதிடாவை திருமணம் செய்து மகாராணி பட்டத்தை வழங்கியுள்ளார். மன்னர் வஜிரலோர்ங்கோன் மூன்று தடவை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர் என்பதும், அவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related items

Comment

Successfully posted