பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி தல: ட்விட்டரில் தெறிக்கவிடும் தூக்குத்துரை ரசிகர்கள்

Mar 02, 2019 01:09 PM 873

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பிறந்த தினமான இன்று, ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

தென்னிந்தியா மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். கடும் உழைப்பினால் சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்தார். இளம்பெண்கள் மனதில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித் குமார் 'தீனா' படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் செல்லமாக தல என்று அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து, ரசிகர்களுக்கு இடையேயான தன் மீதான நன்மதிப்பை இதுவரை தக்க வைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்கு காரணம் ரசிகர் மன்றத்தையே கலைத்தது என்று கூறலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி அஜித்குமார்-ஷாலினி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஆத்விக் குமார் பிறந்தார்.

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை (மே 1) அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், ரத்த தானம் செய்தும் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதேபோல, 'குட்டி தல ஆத்விக் குமார்' பிறந்தநாளான இன்று, ட்விட்டரில் ஹாஸ்டாக் (#HBDAadvikAjith, #KuttyThala) செய்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் ஆத்விக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது, மட்டுமின்றி சாலையோர சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டியும், ஆத்விக் புகைப்படத்தை ஓவியமாக வரைந்தும் அசத்தி உள்ளனர்.
Comment

Successfully posted