ராஜ ராஜ சோழனின் 1033 வது சதய விழா - விழாக்கோலம் பூண்டுள்ள தஞ்சை

Oct 19, 2018 06:56 AM 262

ராஜ ராஜ சோழனின் 1033 வது சதய விழாவையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

சோழ பேரரசை ஆட்சி செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் சதய விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராஜ ராஜ சோழனின் 1,033-வது சதயவிழா தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி சோழர்களில் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில், கோவில் மதில் சுவர்கள், மற்றும் ராஜ ராஜ சோழனின் சிலை, ஆகியவை மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வளைவுகள் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சதய விழாவையொட்டி தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted