"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

Nov 27, 2021 06:43 PM 1457


தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் கனமழையால் பூதலூர் அருகே உள்ள மேல திருப்பத்தூர் முதன்மை கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மழை நீரானது விளை நிலங்களில் தேங்கி நிற்பதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என குற்றம்சாட்டினர்.

எனவே போர்க்கால அடிப்படையில் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Comment

Successfully posted