தஞ்சாவூர் பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் நடைபெற்றது

Jan 23, 2020 04:36 PM 292

தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு அஸ்திர ஹோமம் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் அடுத்த மாதம் 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் ஒன்றாம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. இந்த நிலையில், குடமுழுக்கு சிறப்பாக நடைபெற வேண்டி தஞ்சையில் 8 திசைகளிலும் உள்ள காளியம்மன் கோவில்களிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்களிலும் யாகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கோயிலில் சாரம் அமைத்தல், யாகசாலை அமைத்தல் போன்ற பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், நடராஜர் சன்னதி முன்பு அஸ்திர ஹோமம் நடத்தப்பட்டது.

Comment

Successfully posted