பேருந்துகளை வழக்கம்போல் இயக்குங்கள்-புதிய முறையில் பலனில்லை-பொதுமக்கள் சாலைமறியல்!

Jul 08, 2021 11:20 AM 1325

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வரை இயக்கப்படும் பேருந்துகளை வழக்கம் போல் சென்னை வரை இயக்க கோரி, அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

image

தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டங்களை இணைக்கும், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் வலுவிழந்ததை அடுத்து, 2018 ஆம் ஆண்டு முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

image

இதனால் கடலூர், விழுப்புரம், சென்னை செல்லும் பேருந்துகள் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வழியே இயக்கப்பட்டது. இந்த நிலையில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பாலம் புதுப்பிக்கப்பட்ட பின், அந்த வழியே நகர பேருந்து சேவை மட்டுமே தொடங்கும் என அதிகாரிகள் கூறியதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

image

இந்த நிலையில், அணைக்கரை பகுதி வரை பேருந்துகளை இயக்குவதால் எந்த பலனும் இல்லை எனவும், சென்னை வரை பேருந்துகளை இயக்க கோரியும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

image

மேற்கண்ட செய்தியில் அப்பகுதி மக்கள் விடுக்கும் கோரிக்கையை தெரிந்துகொள்ள

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

Comment

Successfully posted