அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி - கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் குமார ரவிக்குமார்

Dec 09, 2018 09:29 PM 406

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு, கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் குமார ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கொங்கு இளைஞர் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அந்தியூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விவசாயியான முதலமைச்சர், மேட்டூர் வலதுகரை வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

 

Comment

Successfully posted