குடிமராமத்து திட்டங்களால் நிரம்பிய நீர் நிலைகள் : விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி

Jan 12, 2020 07:03 AM 433

விழுப்புரம் மாவட்டம் கோமுகி அணையில் முதலமைச்சர் குடிமாமரத்து திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் நிரம்பியதை அடுத்து, இந்த திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல், விளை நிலங்கள் பயனடைவதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கோமுகி அணையின் பிரதான மற்றும் கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மதகளும் கட்டும் பணி நடைபெற்றது. இதனால் அணையை சுற்றியுள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் இந்த திட்டத்தினால் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல், விளை நிலங்கள் பயனடையும் என்றும், தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், இதனை அறிமுகம் செய்து செயல்படுத்திய  முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Comment

Successfully posted