பாழடைந்த அடுக்கு மாடி கட்டடத்தில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

Jun 12, 2019 09:07 AM 62

செங்கல்பட்டு அருகே பாழடைந்த அடுக்கு மாடி கட்டடத்தில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாழடைந்த கட்டடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டடத்தின் 14 வது மாடியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளளது. இச்சம்பவம் சுமார் 1 மாதத்திற்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும், இறந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செங்கல்பட்டு காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted