மருத்துவ படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு  தொடங்கியது

Aug 11, 2018 01:00 PM 495
மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனைதொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 7 -ம் தேதி வரை நடைபெற்றது.  இதில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,  இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. 13ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted