3ம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்கவேண்டும்

Mar 14, 2019 12:32 PM 148

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 3ம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று பள்ளி கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3ம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று பள்ளி கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2018-19ம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 12ம் தேதி என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, தேர்வு அட்டவணை குறித்த சுற்றிறறிக்கையை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted


Super User

J news